Corruption In India – Unpunished Scams Part 1

IMPORTANT: இந்த செய்தி பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த செய்தியில் சொல்லப்படும் விஷயங்களின் உண்மைகளை நாம் தான் கண்டறிய வேண்டும்!

2004-ம்வருடம் ஆட்சிக்கு வந்து, 2013 வரை 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இவர்கள் நடந்தியுள்ள ஊழல்களின் பட்டியல் ஏராளமானது.  இந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகளை பட்டியலிட்டு காட்டினால், மீன்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும், அதே வேளையில் ஏன் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ?  என்கின்ற  சிந்தனையும் வெளிப்படும்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்.

மத்தியில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்த போதெல்லாம் ஊழல் என்பது சகஜமானதாகவே மாறிவிட்டது.  நேரு காலம் முதல் தற்போது ராகுல் காந்தி காலம் வரை காங்கிரஸ் கட்சி என்றாலே அது ஊழல் கட்சி என கூறும்படி மாறிவிட்டது. வேடிக்கையாக ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டார்கள், All India Congress Committee     என்றாலே அது     All India Corruption Congress    என்பதாக குறிப்பிட்டார்கள்.  இவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவி கொடுத்த பிரதம மந்திரிகள் உண்டு.  உதாரணமாக நேரு பிரதம மந்திரியாக இருந்த போது, ராணுவத்திற்கு 200 ஜீப் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முற்பட்ட போது, ஊழலுக்கு துணை போன கிருஷ்ண மேன்னுக்கு ராணுவ அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  திருடன் கையில் அரசின் கஜானாவின் சாவியை கொடுத்த்து போல.

இந்தியாவில் ஊழலின் பன்முகத் தன்மையை ஆராய கே.சந்தானம் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.  1964ம் வருடம் கே.சந்தானம் அவர்கள் அளித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  இதன் பின்னர் பல்வேறு முட்டுக் கட்டைகளுக்கு பின்னர் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த ஆணையம் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை பற்றி விசாரிக்க வேண்டுமானால் சி.பி.ஐ யை மட்டும் நம்ப வேண்டியுள்ளது.  தற்போது சி.பி.ஐ. என்பது காங்கிரஸ் கட்சியின் எடுபிடி ஏவள் ஆட்களாக மாறிவிட்டார்கள்.  இதன் காரணமாக பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரனைக்கு வராமலே புதைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.  விசாரணை என்ற பெயரில் ஆண்டுக்கணக்காக இழத்தடிக்கும் போக்கும் உண்டு.  லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட தாமஸ் என்பவரை ஊழல் கண்கானிப்பு ஆணைய தலைவராக காங்கிரஸ் நியமனம் செய்தது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், தானாகவே பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தாமஸ்க்கு ஏற்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள்

2004-ம் வருடம் முதல் 2013-ம் வருடம் வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும்.  இதில் செய்துள்ள ஊழல்களின் எண்ணிக்கை பட்டியல் போடுவதுடன், சில முக்கியமான ஊழல்கள் பற்றி மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை கூறுவதையும் பார்க்க வேண்டும்.  முக்கியமாக வெளியே விவாதிக்கப்படும் ஊழல்கள் (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2) நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6)ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்கு சந்தை ஊழல்  போன்ற ஊழல்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தயாவால் கூட்டணி கட்சியினர் அடித்த கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகளும் உண்டு.  இதன் காரணமாக மத்தியில் உள்ள அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மாநில கட்சிகள் அடித்த கொள்ளையை காட்டியே அரசை காப்பாத்திக் கொள்கிறார்கள்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சியை சற்றே கானலாம்

2ஜி அலைக் கற்றை ஊழல்

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல் தொகை முழுவதும் கூட்டினால் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை நெருங்க முடியாது.  இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள்.  சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் இந்த மோசடியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது.  இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து.

இது சம்பந்தமாக நிறைய விஷயங்களுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  பல்வேறு தரப்பிலிருந்தும் 2ஜி அலைக்கற்றை  தவறாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இந்த போது, 2ஜி கோப்புகளை வரவைத்து, தனது அதிருப்தியை ஒரு முறைகூட பிரதமர் தெரிவிக்காத்து ஏன்? அந்த துரதிருஷ்டவசமான முடிவு அமலாக அனுமதித்த்து எவ்வாறு? அலைக்கற்றையின் அளவு குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கான வரையறையில் அலைக்கற்றையின் விலை சேர்க்கப்படாத்து ஏன்?  முதல்வரையறையில் விலை இடம் பெற்றிருந்த்தாகவும், தி.மு.க.வின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.  சட்டத்திற்குப் புற்ம்ப உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதில் கணிசமான பங்குகளை மற்றொருவருக்கு விற்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?  அலைக்கற்றையின் சரியான விலையை அறிவதற்காக ஏலம் என்ற ஒளிவு மறைவற்ற முறையை பயன்படுத்துமாறு 2.11.2007ந் தேதி அமைச்சர் ராசாவிடம் கூறிய பிரதம மந்திரி 3.1.2008-ல் அது பற்றி கண்டும் கானாமலும் இருந்த்து ஏன்?  2.11.20007க்கம் 3.1.2008க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்த்து, அல்லது தி,மு.க. கொடுத்த நெருக்கடி அவ்வளவு கடுமையானதாக இருந்த்தா? என்பது  போன்ற கேள்விகளுக்கு இன்னு வரை பிரதமரிடமிருந்து விளக்கம் வரவில்லை.

திரு அனில் தீருபாய் அம்பானிக்குச் சொந்தமான ஸ்வான் காபிடல் கம்பெனியின் பங்குகள் டி.பி.ரியாலிடி கம்பெனிக்குச் சாதகமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டன.  இந்த மாற்றம் தொலை தொடர்ப்பு துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாகவே செய்யப்பட்டது.  இதன் காரணமாக திரு.சுப்பிரமணிய சுவாமி 29.11.2008-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்க்கு ஒரு கடிதம் எழுதினார் ” லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் (1988) 19வது பிரிவின் கீழ், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது தனி நீதி மன்றத்தல் வழக்கு தொடர அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார்.  இதனால் இதில் நடந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்த்து, இது மட்டுமில்லாமல், பயனிர் பத்திரிக்கையின் நிருபர் கோபி கிருஷ்ணன் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதியதும், இந்த ஊழல் தெருவிற்கு வந்த்து.

இதில் உள்ள மர்மங்கள் சிந்துபாத் தொடர்கதையை போல் நீண்டுகொண்டே போகிறது.  காங்கிரஸ் கட்சி தன்னை காத்துக் கொள்ள ராசாவை பலிகடாவாக மாற்றிவிட்டது.  பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலேயேயும், அமைச்சர் கபில் சிபில் உட்பட பலரும், ஊழல் நடைபெற வில்லை, தொலை தொடர்ப்பு துறைக்க எவ்வித இழப்பும் எற்படவில்லை என்ற கோஷத்தை மட்டுமே லாலிபாடினார்கள்.  உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவும், பொதுநல அமைப்புகள் மூலமாகவும், பாராளுமன்றத்தில் பாராதிய ஜனதா கட்சி உட்பட பல எதிர்கட்சிகளில் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், அமைச்சர் பதவியிலிருந்து ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஆகவே நாட்டிலே நடந்த மிகப் பெரிய ஊழல் 2ஜி என்றால்ஈ அதற்கும் போல் ஊழல் எங்களால் செய்ய இயலும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் தாங்கள் யார் என்பதை காட்டியுள்ளார்கள்.

நிலக்கரி ஊழல்

2011-ம் வருடம் மே மாதம் 12-14 தேதியிட்ட ஒரு தமிழ் வார பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் 26 லட்சம் கோடி…….. ஸ்பெக்ட்ரத்தை மிஞ்சும் நிலக்கரி ஏழல்  அம்பலத்திற்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.  ஆனால் 2012-ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் இது பாராளுமன்றத்தில் பற்றி எரிந்த்து.  ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்ன நடந்த்து என்று எனக்க தெரியாது.  தவறே நடக்கவில்லை என்று துறை அமைச்சர் ராசா சொன்னதை நான் நம்பினேன்.  இதற்கு மேல் எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை.  என பிரதமர் தெரிவித்தார்.  ஆனால் தன்வசம் வைத்திருந்த நிலக்கரி துறையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது எவ்வாறு தெரியாமல் போனது, விக்கரமாதித்தன் கதையாக மாறிவிட்டது.

2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை செல்ல அந்த்த் துறையை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.  அந்த  சமயத்தில் மட்டும் 63 சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன.  2004லிருந்து 2010 வரை 168 சுரங்கங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இதில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது 113 சுரங்கங்கள்.  தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரியின் அளவு 21.69 பில்லியன் டன்கள்.  இழ்ப்பீடு சம்பந்தமாக அரசு தெரிவித்த கருத்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மின் தேவையையும் கவனத்தில் கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறுகளுக்கு பரிகாரம் தேட அரசு முயல்கிறது.

இதில் 26 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்குறிய கணக்கு, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 1டன் நிலக்கரியின் விலை ரூ2500 என்றாலும், இதில் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு போக நிகர லாபம் 1டன்னுக்கு ரூ1250 கிடைக்கும்.  ஆனால் அரசு தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலக்கரிக்கு டன் 1க்கு ரூ100 மட்டுமே மத்திய அரசுக்கு ராயல்டியாக கொடுத்தால் போதும் என அரசு அறிவித்த்து. இதனால் 21.69 பில்லியன் டன் விற்பனை செய்தால் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ26.91 லட்சம் கோடி ரூபாய்.

விதிகளுக்கு புறம்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள் 36 மாதங்களுக்குள் தனது உற்பத்தியை தொடங்கி விட வேண்டும், வனப்பகுதியில் அமைந்திருந்தால், கூடுதலாக ஆறுமாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே விதி, இந்த விதிக்கு மாறாக  உரிம்ம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல், வேறு ஒருவருக்கு விற்று கொள்ளையடித்த சம்பவமும் உண்டு.

தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்கு, காங்கிரஸ் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போட்டார்கள்.  சுரங்க ஒதுக்கீட்டை ஏன் ஏலத்தில் விட வில்லை என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் ஏலத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தார்கள் என பிரதமர் நா கூசாமல் பொய் பேசினார்.  போட்டிசார் ஏலமுறைக்கு பா.ஜ.க. முதல்வரகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக 2006-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ஏல முறையை ஏற்றன., ஏல வருவாயில் தமக்கு பங்கு வேண்டும் என்பதே அவர்கள் விதித்த நிபந்தனை என்பதை தெரிவிக்க பிரதமர் மறந்து விட்டார்.

தற்போது விசாரனையில் உள்ள விவகாரத்தில், பல்வேறு திருப்பங்கள் நடந்தன.  நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் கானவில்லை என உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்த்து.  பிரதமரை காப்பதற்காகவே, சட்ட அமைச்சர் தன்னிசையாக சி.பி.ஐ.யின் பிரமான வாக்குமூலத்தை திருத்தியது.  ஆகவே மிகப் பெரிய ஊழல் நடந்த போதும் வருங்கால பிரதம மந்திரியாக சித்தரிக்கப்படும் ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.  ஆகவே இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம்  அளவுக்கு இந்த ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  எனவே மீன்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு லஞ்சம்

2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா போட்டுக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரசை ஆதரித்த இடது சாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.  இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் அரசை காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சி உறுப்பினர்களுக்க கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க்பட்ட சம்பவம், இந்த அரசு ஊழலை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டும் சம்பவமாகும். நேரிடையாகவே பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பின்னரும்  குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

சுமார் 8,000 கோடிக்கு மேல் மக்கள் வரி பணத்தை வைத்து நடந்திருக்கும் இந்தப் பகல் கொள்ளையில் கல்மாடியும், விளையாட்டு ஏற்பாடு குழுவும் மட்டும் பொறுப்பல்ல, இந்த விளையாட்டு போட்டியை அமலாக்தில் பங்கு  வகிக்கும் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும் இதில் தொடர்ப்பு உள்ளது.   விஞ்ஞான ரீதியாக கொள்யைடிப்பதில் காங்கிரஸ் கட்சியின் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டுவதாக உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அடித்த கொள்ளைகள்.  சில கொள்ளைகளை பார்த்தாலே இதன் விபரீதம் நன்கு புரியும்.  அவசர விளக்கு வாங்கும் போது 1 விளக்கின் சந்தை விலை ரூ920 , கல்மாடி வாங்கியது ரூ2,623 ஒரு விளக்கின் விலையில் வாங்கியுள்ளார்.  ரூ18,000க்கு சந்தையில் விற்கப்படுகின்ற வின்டோ ஏ.சியின். விலை, கல்மாடி வாங்கும் போது ரூ1,18,182க்கு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது,  இது போல் 110 வின்டோ ஏ.சி வாங்கப்பட்டுள்ளது, இதில் மட்டும் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எஸ் பாண்ட் ஊழல்

2ஜியை ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல் என்றால், 4ஜி எஸ்.பாண்ட் ஊழல் ரேஸ் கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல் என்றால் மிகையாகாது.  இஸ்ரோ விண்வெளி  ஆராய்ச்சி மையத்திற்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்த்து. இதற்கு பெயர் எஸ்-பாண்ட் அலைக்கற்றை என்று பெயர்.  இந்த எஸ் பாண்டிலிருந்து தான் சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச் ஒளிபரப்பை நடத்துகின்றன.  காலியாக இருந்த எஸ்.பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபரத்தைத் தொடங்கியது, இதில் தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  சுமார் 2 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டில் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் எஸ்.சந்திரசேகர் என்பவர் ஓய்வு பெற்றதும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள்.  இந்த நிறுவனம் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டு வரம் முயற்சிக்கு வித்திட்டார்கள்.  12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது.  இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்த்த்தை செய்து கொண்டது. இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கியமான விவகாரம் விண்வெளி துறையாகும்.   2ஜி விவகாரம் விவாத பொருளாக மாறிய போது, 4ஜி விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்த்து.   இந்த ஒப்பந்தம் பிரமருக்கு தெரிந்து நடந்த்தா? பிரதமரை ஏமாற்றி விட்டு அவரைச் சுற்றி இருக்கும் லாபி அலைக்கற்றையை முழுங்கியதா? என பத்திரிக்கைகளும், எதிர்கட்சிகளும் குடைய துவங்கின.  மிகவும் முக்கியமான துறையான விண்வெளியில் நடந்துள்ள ஒப்பந்தம்,  என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், நாட்டின் பாதுகாப்பு பற்றி அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது என்றே அர்த்தம்.  மேலும் 2005 ஜனவரி மாதம் 28-ல் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த போது, தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி ஓர் ஒப்பந்த்த்தைப் போட்டது, அந்த ஒப்பந்தம் பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.

இந்த ஒப்பந்த்த்தின் படி இரண்டு செயறகைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும்.  இதைத் தான் பிரதமரது அலுவலகம் தெரியாது என தெரிவித்துள்ளது.  இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம், இது பிரதமருக்கு தெரியாது என ஒப்புக் கொண்டார். இது உண்மை என்றால் பிரதமருக்கு தெரியாமல் மறைத்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

அரிசி ஏற்றுமதி ஊழல்

ஆனந்த் சர்மா தலைமையில் உள்ள வர்த்தக அமைச்சகம், பாசுமதி அல்லாத அரிசி 1மில்லியன் டன் ஏற்றுமதி  செய்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அரசின் விதிப்படி 12,500 டன்னுக்கும் ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும்.  இந்த விதிக்கு புறம்பாக 2011 ஜீலை மாதம் 19 தேதி வெளி நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எஃப்டி) வெறும் 14 நிறுவனங்களுக்கும், 24 தனி நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கியுள்ளார்.  லட்சக்கணக்கான டன் அரிசி ஏற்றுமதியை ஆறு நபர்களே அனைத்தும் வளைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்து.  2009 முதல் 2011 வரை மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி ஏற்றுமதி உரிமங்கள் வழங்கப்பட்டன.  அரிசி ஏற்றுமதி உரிமம் வழங்கும் நடைமுறையும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிப்படையானதாக இல்லை.  கோட்டாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3,500 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதவிறக்கும் செய்யப்பட்டதால், இணைய தளமே முடங்கிப் போனது.  அரசு ஏற்றுமதி அரிசிக்கு டன் 1க்கு 400 டாலர் என விலை நிர்ணயம் செய்த்து, ஆனால் வெளிச்சந்தையில் டன் 1க்கு 530 டாலர் விற்கும் போது 130 டாலர் குறைவாக விலை நிர்ணயம் செய்ததால் அரசுக்கு இழப்பு ரூ650 கோடி, இது அரசியல்வாதிகள் , அமைச்சர்களுக்கு சென்றதாக விசாரனையில் தெரியவந்தது.  12,500 டன்னுக்கு ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும், விதி மீறப்பட்டு, அகமதாபாத் நகரைச் சார்ந்த அடானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு 50,000 டன் ஒதுக்கீடு கொடுக்க உரிமம் வழங்கப்பட்டது. மும்பையை சார்ந்த அல் கியாஸ் எக்ஸ்போர்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும் சேர்ந்து 62,000 டன்னுக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஜே.கே ஜெயின் என்பவருக்கு 16 உரிமங்கள், அஸ்வின் ஷா என்ற நிறுவனத்திற்கு 3 உரிமங்கள், அல் கியாஸ் என்ற நிறுவனத்திற்கு 5 உரிமங்கள், பகாரியா நிறுவனத்திற்கு 8 உரிமங்கள் என அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு அதிக அளவு உரிமங்கள் வழங்கப்பட்டன.

 

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர்.

சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை.

Image caption காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை

ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலேயே வாழவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது.

1952 தேர்தல்களில் போட்டியிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. அவை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரண்டாம் உலகப்போரின் போது ஊழல்

இரண்டாம் உலகப் போரின் போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அத்தகையவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல், அதிகாரத்திலிருந்தவர்கள் பயன்பெற்றனர். பின்னர் தொழிற்சாலை துவங்குவதும் நடத்துவதும் மத்திய மாநில அரசுகளின் அனுமதியினை, விருப்பத்தினைப் பொறுத்தே என்ற நிலையில்தான் மறைந்த இராஜாஜி சாடிய பெர்மிட்.லைசென்ஸ் கோட்டா ராஜ் அங்கிங்கெனாதபடி தலைவிரித்தாடத் துவங்கியது.

1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கரங்களில் ஏகப்பட்ட அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. எனவேயே இன்னமும் ஊழல் தொடர்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். உலகின் 197 நாடுகளில் இலஞ்சத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியா 69வது இடத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

நேரு காலத்து ஊழல்

பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமான விகே கிருஷ்ணமேனன் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது 1948ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஜீப்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது. ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் கழகத்திற்குப் பெரும் இழப்பு என்று தெரியவந்து முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், அப்பரிவர்த்தனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

பின்னர் நேருவுக்கு நெருக்கமான பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் எழ அவரும் பதவி விலக நேரிட்டது. அதே போல புகார்களின் பின்னணியில் மஹராஷ்டிர முதல்வர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.அந்துலே ராஜினாமா செய்தார், இவ்வாறு பதவி விலகல்கள் ஆனால் சிறைத் தண்டனை என்று எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்திரா காலம்

தனது மகன் சஞ்சய் காந்தி மாருதி கார் நிறுவனம் தொடங்க பல்வேறு சலுகைகள் முறைகேடாக வழங்கப்பட்டன என்ற புகார் வலுக்க பின்னர் 1975 நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு புகார்கள் ஓய்ந்தன. 1987ல் ராஜீவ் ஆட்சியிலிருந்தபோது ஸ்வீடன் நாட்டு போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கியதில் பெரும் ஊழல் என்ற புகார் இந்தியாவையே உலுக்க காங்கிரஸ் 1989 தேர்தல்களில் தோல்வி கண்டதற்கு போஃபர்ஸ் ஊழலும் ஒரு காரணம் என கருதப்பட்டது.

இவ்வாறான பதவி விலகல், ஆட்சிமாற்றங்களுக்கப்பால் வழக்கு பதிவாகி, நீதிமன்றங்களில் முறையாக விசாரணை நடந்து தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மிகச் சிலரே.

காங்கிரசைச் சேர்ந்த சுக் ராம் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்தபோது மூன்று இலட்ச ரூபாய் கையூட்டு பெற்றார் என்ற புகாரில் 15 ஆண்டுகள் கழித்து, 2011ல் அவருக்கு 85 வயதாகிவிட்ட நிலையில்ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1996ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளிலும்

சாக்குப்பைகளிலும் 1.16 கோடி ரூபாய் கத்தையாக கத்தையாக கரன்சி நோட்டுக்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனிம வளம் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்த்ன் முதல்வராக செப்டம்பர் 2006லிருந்து ஆககஸ்ட் 2008 வரை பணியாற்றிய மது கோடா 2500 கோடி ரூபாய் அளவு கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டது உட்பல பல்வேறு ஊழல் புகார்களுக்காளாகி சிறையிடப்பட்டு ஏறத்தாழ நான்காண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.

1991-96 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முறைகேடான பல்வேறு செயல்களில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டி பின்வந்த திமுக அரசு அவர் மீது வழக்குக்கள் பலவற்றைத் தொடுத்தது. அவற்றில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை மீறி ப்ளெசண்ட் ஸ்டே சொகுசு ஓட்டல் கட்ட அனுமதி அளித்தது மற்றும் டான்சி எனும் தமிழக அரசு நிறுவனத்தின் சொத்துக்களைத் தனியாருக்கு விற்றது இவை குறித்த மூன்று வழக்குக்களில் அவர் தண்டனையும் பெற்றார். ஆனால் மேல் முறையீட்டில் அனைத்திலும் விடுதலையானார்.

அவருக்கெதிரான அளவுக்கதிகமாக சொத்துகுவித்த வழக்கு இன்னமும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

பின்னர் 1957ல் எல் ஐ சி நிறுவன பங்குகளை முறைகேடாக முந்த்ரா என்பவர் விற்றது தொடர்பான பிரச்சினையில் அன்றைய நிதி அமைச்சர் டிடிகிருஷ்ணமாச்சாரி, ஊழல் புகாரில் பிரதமர் நேருவுக்கு நெருக்கமான பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன், பின்னாளில் மஹராஷ்டிர முதல்வர் ஏ.ஆர்.ஆந்துலே போன்றோர் பதவி விலக நேரிட்டது.

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் பிரதமர் இந்திரா படுதோல்வி அடைந்ததற்கு அவர் மீதான ஊழல் புகார்களும் ஒரு காரணம் என கருதப்பட்டது. அவரது மகன் ராஜீவ் காந்தி 1989 தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்கும் 64 கோடி ரூபாய் போஃபர் பீரங்கி ஊழல் குற்றச்சட்டுக்கள் என நோக்கர்கள் கூறினர்.

கருப்புப் பணம்

சட்டவிரோதமாக ஒருவரிடம் பணம் இருந்தால் அது கருப்பு பணம் ஆகும். கருப்பு பணம் இருப்பதற்கு இரண்டு சாத்திய வழிகள் உள்ளன என்று இந்திய அரசு குறிப்பிடுகின்றது. போதை மருந்து வியாபாரம், பயங்கரவாதம், ஊழல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முதல் வழி ஆகும். சட்டரீதியாக பணம் வந்தாலும், அதை வருமானத்தைதில் காட்டாமலோ வரிகள் கட்டாமலோ இருப்பது இரண்டாவது வழி ஆகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள கருப்பு பணம்

2010 இல் தி இந்து நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையின் படி, சுவிஸ் வங்கிகளில் 1456 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக கறுப்புப் பணத்தை இந்தியர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. “மற்ற உலக நாடுகளின் கருப்புப் பணம் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தியாவிலிருந்து இருக்கும் கருப்புப்பணம் அதிகமானது” என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் அதன் 2006 ஆம் ஆண்டின் அறிக்கையில் கூறியதாக என்று சில செய்தி அறிக்கைகள் கூறின. எனினும் அந்த சங்கத்தின் சர்வதேச தகவல் தொடர்பு தலைவர் இதை மறுத்தார். சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தின் அளவு நாட்டின் தேசிய கடனை விட 13 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வேறொரு அறிக்கை குறிப்பிட்டது. இந்த குற்றச்சாட்டுக்களையும் சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் மறுத்தது. இந்திய ஊடகங்களும் எதிர் கட்சியினரும் இந்த கருப்புப் பணத்தின் அளவை அடிப்படையே இல்லாமல் அதிகப்படுத்தியுள்ளனர், என்று சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் ஜேம்ஸ் நேசன்(James Nason) ஒரு பேட்டியில் கூறினார். சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் அது போன்ற ஒரு அறிக்கை வெளியிடவே இல்லை என்று கூறினார்.

நீதித்துறை

திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின்(Transparency International) படி, இந்தியாவில் நீதித்துறையில் “நீதிமன்ற வழக்குகளை காலதாமதமாக முடிப்பது, நீதிபதி பற்றாக்குறை, மிகவும் சிக்கலான நடைமுறைகள் போன்ற காரணிகளால் ஊழல் நடக்கிறது”.

ஆயுதப்படை

இந்திய ஆயுதப்படைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமான படை இவைகளின் மூத்த இராணுவ அதிகாரிகள் சிலர் மேல் ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன. 2000-2010 காலத்தில் நடந்த பல ஊழல்கள் இந்திய இராணுவ புகழுக்கு சேதம் ஏற்படுத்தியது. அரசாங்க சொத்துக்களை மீண்டும் விற்பனை செய்வது, போர் பயணங்களை பித்தலாட்டம் செய்வது, ஆயுத படைகள் பணத்தை கொள்ளையடிப்பது போன்றவைகள் நடந்துள்ளன.

ஊழலுக்கு எதிரான சட்டம்

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளைய ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், விடுதலை அடைந்த இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்:

  • இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860
  • வருமான வரி சட்டம் வழக்கு பிரிவு, 1961
  • ஊழல் தடுப்பு சட்டம், 1988
  • இரவல் பெயரில் பரிமாற்றங்களை தடுப்பதற்கு, இரவல் பெயரில் பரிமாற்றங்கள் (தடுப்பு) சட்டம், 1988.
  • பணமோசடி தடுப்பு சட்டம், 2002

2005 ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் (ஒப்புதல் இல்லை) இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது. அந்த மாநாடு ஊழலின் வகைகளையும் அவைகளை தடுக்க சில முறைகளையும் குறிப்பிட்டுள்ளது. 2011 லோக்பால் மசோதா, மக்களவையின் முன் நிலுவையில் உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை, விசில் புளோயர் பாதுகாப்பு மசோதாவை(The Whistle Blowers Protection Bill), 2011 நிறைவேற்றியது. இந்த மசோதா இப்போது அதன் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

ஊழல் எதிர்ப்பு போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்

வருமான வரி புலனாய்வு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் மத்திய புலனாய்வு துறை இவை அனைத்தும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் ஆகும். ஆந்திர பிரதேசம் (ஆந்திர பிரதேசம் ஊழல் எதிர்ப்பு பணியகம்) மற்றும் கர்நாடகா (லோகயுக்தா) போன்ற சில மாநிலங்களில், அவர்களுடைய தனி ஊழல் எதிர்ப்பு முகவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளன. “பணத்திற்கு பிணை” மோசடியில், மத்திய புலனாய்வு துறையினர் (சி.பி.ஐ.) ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, ஊழல் எதிர்ப்பு பணியகம் (Anti Corruption Bureau, ஏபிசி), பெரிய அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி தல்லுரி பட்டாபிராம ராவ்(Talluri Pattabhirama Rao) 19 ஜூன் 2012 அன்று, கர்நாடக அமைச்சர் ஜனார்தன ரெட்டியை இலஞ்சம் வாங்கி பிணையில் வெளியேவிட்டதற்காக கைது செய்யப்பட்டார். ஜனார்தன ரெட்டி அவரது சராசரி வருமானத்தை விட பல மடங்கு சொத்து குவித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியா சிமெண்ட்ஸ், அரசு ஒப்பந்தங்களுக்காக, ரெட்டியின் வணிகங்களில் முதலீடு செய்து வந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஏழு மற்ற நபர்கள் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள்

ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம் நிருபிக்கப்பட்டால், அபராதத்துடன் அல்லது அபராதம் இன்றியோ குறைந்த பட்சம் ஆறு மாதங்களும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டும், அதிக பட்சம் பத்து ஆண்டுகளும் சிறை தண்டனை உண்டு. மேலும் ஊழலின் மூலம் சேர்த்த அசையும் சொத்துகளையும், அசையாச்சொத்துகளையும் கைப்பற்றவும், முடக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

நம் நாட்டில் சேர்த்த ஊழலின் மூலம் சேர்த்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்தும், பிறகு அதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வருவோர் மீது பணச்சலவைத் தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Launering Act, 2002)ன்படி தண்டணைக்குரிய குற்றமாகும்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான பிற சட்டங்கள்

ஊழல் செய்தவர்கள் கீழ்கண்ட சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்கள்

  • இந்திய தண்டனைச் சட்டம், 1860 (Indian Penal Code|Indian Penal Code, 1860)
  • ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (Prevention of Corruption Act, 1988)
  • வருமான வரிசட்டம்,1961ன் படி வருமானவரி ஏய்ப்பு வழக்கு தொடரலாம் (Prosecution section of Income Tax Act,1961)
  • இரவல் (பினாமி) பெயரில் சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம், 1988 (The Benami Transactions (Prohibition) Act, 1988 to prohibit benami transactions).
  • பணச்சலவை தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002)
  • அன்னிய செலாவனி மோசடி தடுப்புச் சட்டம்
  • மருந்துகள் மற்றும் உணவு கலப்படத் தடைச் சட்டம்
  • இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

ஊழலுக்கு எதிரான அரசு அமைப்புகள்

ஊழல் மிகுந்த அரசாங்க மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் பின்வருமாறு உள்ளன:

  • பாரத் ஸ்வாபிமேன் அறக்கட்டளை(Bharat Swabhiman Trust)யோக குரு சுவாமி ராம்தேவ் ஆல் நிறுவப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக, கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரத்தை இயக்கி வருகிறது.
  • 5 வது தூண் (5th pillar) சுழி (பூஜ்ஜியம்) ரூபாய் நோட்டை தயாரித்தது. ஊழல் அதிகாரிகள் இலஞ்சம் கேட்கும்போது அவர்களுக்கு தருவதற்காக இது வடிவமைக்கப்பட்டது.
  • ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption), ஊழலுக்கு எதிராக வேலை செய்ய, பல்வேறு தொழில்களில் இருக்கும் குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். அது தற்போது அன்னா ஹசாரே தலைமையில் இயங்குகிறது.
  • ஜாகோ ரே!(Jaago Re) ஒரு பில்லியன் வோட்டு, டாடா தேயிலை மற்றும் Janaagraha வால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். முதலில் இளைஞர்கள் வாக்காளர் பதிவை அதிகரிக்க போராடியது. அதன் பின்னர், ஊழல் உள்ளிட்ட பிற சமூக பிரச்சினைகளுக்கு எதிராகவும் வேலை செய்தனர்.
  • சமூக வெளிப்படைத்தன்மை, உரிமைகள் மற்றும் நடவடிக்கை கூட்டமைப்பு (அஸ்ட்ரா) கர்நாடகாவில் ஊழலுக்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
  • நடுவண் புலனாய்வுச் செயலகம்(Central Bureau of Investigation) (CBI)[1]
  • தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)(National Inteligence Agency}
  • நடுவன் விழிப்புணர்வு ஆணையம்(Central Vigilance Commission) (CVC)[2]
  • இந்திய தலைமை கணக்காயர் ( Controller and Auditor General of India) (CAG)[3]
  • கருப்புப்பணத்தை ஒழிக்க, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் புலனாய்வு அமைப்பு (Central Board of Direct Taxes (CBDT)[4]
  • தமிழ்நாடு மாநில அரசு விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம்[Directorate-of-Vigilance-and-754.html
  • இந்திய ரிசர்வ் வங்கியின்அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு[5]

கையூட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான அரசு சாராத நிறுவனங்கள்

  • இடித்துரைப்பாளர்கள்
  • ஊழலுக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு[6]
  • ஊழலுக்கு எதிரான இந்தியா, சென்னை[7]
  • தமிழ்நாடு லஞ்ச, ஊழல் எதிர்ப்பு இயக்கம், மதுரை.

இந்தியாவில் ஊழலுக்கான காரணங்கள்

இந்தியாவில் ஊழலை ஊக்குவிக்க பல காரணங்கள் இருப்பதாக உலகின் மிகப்பெரிய தணிக்கை மற்றும் இணக்கம் நிறுவனங்களில் ஒன்றான KPMG அதன் 2011 ஆம் அறிக்கையில் குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையின்படி அதிக வரிகளும், மிக அதிக அதிகாரத்துவ கட்டுப்பாடுகளும் முக்கிய காரணங்கள் ஆகும். இந்தியாவில் நிறைய ஒழுங்குமுறை அமைப்புகள் இருக்கின்றன. அவைகளுக்கு ஒரு தனி நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ ஏதிலிருந்தும் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை ஊழல்வாதிகள் இலஞ்சம் வாங்குவதற்கு பயன்படுத்திகொள்கிரார்கள். இலஞ்சம் கட்டாமல் இருந்தால் காரியம் தாமதமடைந்து பாதிக்கப்படும். இதற்கு இலஞ்சம் செலுத்துவதே மேல் என்று மக்கள் முடிவெடுக்கிறார்கள். சில சமயங்களில் அதிக வரி கட்டுவதற்கு பதிலாக ஊழல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மிகவும் மலிவாக இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் 150 நாடுகளில் ஊழலுக்கான மிகப் பெரிய காரணம் ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில், இந்தியாவில், உயர் மூலதன ஆதாயத்தின் வரி, பெரிய அளவிலான ஊழலுக்கு ஊக்குவிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில் உட்பட பல நாடுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. உலக வரலாற்றில் பல கலாச்சாரங்களிலும் பல நூற்றாண்டுகலாகவும் நடக்கிறது.

வரி விகிதங்கள் மற்றும் ஒழுங்குமுறை சுமைக்கு கூடுதலாக ஒளிபுகா செயல்முறைகளாலும் ஊழல் வாழ்கிறது என்று, KPMG அறிக்கை கூறுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாதது இலஞ்சம் கேட்பவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் இடமளிக்கிறது.

உலகின் பிற நாடுகள் போல, அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகார தேவைகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் வாங்கும் முறைகள், கட்டாய செலவு திட்டங்கள், ஊழல்வாதிகளுக்கு அபராதம் இல்லாமை, வெளிப்படையான சட்டம் மற்றும் நடைமுறைகள் இல்லாமை இவை அனைத்தும் இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களாக, சர்வதேச நாணய நிதியம் (international monetary fund) நடத்திய ஆய்வு ஒன்றில் வீட்டோ டான்சி (Vito Tanzi) கூறுகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இவை அனைத்தும் இந்தியாவில் ஊழல் மற்றும் நிலத்தடி பொருளாதாரத்திற்கான சில காரணங்கள் என்று கண்டுபிடித்துள்ளது.

ஊழலின் விளைவுகள்

KPMG இன் ஓர் அறிக்கையின்படி, “உயர் மட்ட ஊழல் மற்றும் மோசடி இப்போது நாட்டின் நம்பகத்தன்மையை மற்றும் [அதன்] பொருளாதார வளர்ச்சியை தகர்க்க அச்சுறுத்துகிறது”.

பொருளாதார கவலைகள்

ஊழல் அதிகாரத்துவ தாமதத்தை மேலும் அதிகரிக்கலாம். திறமையின்மையையும் அதிகப்படுத்தும். இதனால் ஊழல்வாதிகள் மேலும் அதிகமாக இலஞ்சம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. நிறுவன செயல்திறன் பற்றாக்குறைகளால் மூலதனத்தின் பிரைவேட் மார்ஜினால் ப்ரொடக்ட்(private marginal product ) மற்றும் முதலீட்டு விகிதம், இவைகளை குறைக்கிறது. நாட்டின் வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கிறது. லெவின் மற்றும் ரேநேல்ட்(Levine and Renelt), பொருளாதார வளர்ச்சிக்கு முதலீட்டு விகிதம் ஒரு மிக முக்கிய உறுப்பு என்று காட்டினர். அதிகாரத்துவ திறமையின்மை வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, முதலீட்டுகளை தவறான இடத்தில் போடுவது. மேலும், ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கு குறைவான பொருளாதார வளர்ச்சியை ஊழல் உண்டாக்கும்.

குறைந்த ஊழல், உயர் வளர்ச்சி விகிதங்கள்

இந்தியாவில் ஊழலின் நிலை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அளவு போல் குறைவாக இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் 4-5 சதவீதம் முதல் 12-13 சதவீதம் வரை அதிகரிக்கும். ஊழல் காரணமாக ஒரு ஆண்டில் இழந்த இந்திய வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் நிகரானது என்று சி. கே. ப்ரகுஅலாத் (C. K. Prahalad ) மதிப்பிடுகிறார்.

ஊழலின் அளவு இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. ஜூலை 2011 யில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், குஜராத் மாநில அரசாங்கம் மிகவும் கடுமையான இலஞ்சம் ஒழிப்பு விதிகளை வகுத்துள்ளது; இதனால் அதிகாரிகள் இலஞ்சம் கேட்க முடியாது, மற்றும் தொழில் முனைவோர் நிறுவனங்களுக்குள் தலையிடவதில்லை என்று தி எகோநோமிஸ்ட்(The Economist) கூறுகிறது. மிகவும் குறைந்த ஊழல் மற்றும் திறமையான அதிகாரத்துவம் குஜராத் மாநிலத்தில் உள்ளது என்று அவ்வறிக்கை கூறுகிறது. அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம், வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வரும் சில சீனா பகுதிகளுடன் ஒப்பிடும் அளவிற்கு அதிகமாக உள்ளது. மேலும், குஜராத்தின் வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

News Sources

https://srilankamuslimnet.wordpress.com/

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D

http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *