Naxalite History – Only The Truth

Naxalite History - Only The Truth

June 16, 2018

Share on Facebook

Tweet on Twitter

 

“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”,

ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,

– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.

– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.

– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.

– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.

– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.

– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.

நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

** ADVANCE FOR SUNDAY, MAY 20 ** A tribal member holds a gun at a meeting with Naxalites, officially the Communist Party of India (Maoist) that takes its name from the Naxalbari, a village outside Calcutta where the revolt began in 1967, in the Abujh Marh forests, in the central Indian state of Chattisgarh, April 13, 2007. Over the past four decades, this Maoist army with 10,000-15,000 fighters using old or handmade guns, has taken root in places forgotten during India’s spectacular economic rise, creating an archipelago of rebel territory scattered across nearly half of the country’s 28 states. In Chhattisgarh, the chasm between the growing economy and rural poverty has been magnified by conflicts over everything from forest conservation to mining rights, with tribals often expelled from their jungle homes. (AP Photo/Mustafa Quraishi)

அறுபதுகளில் துவங்கிய நக்சல்பாரி இயக்கம், பல்வேறு ஏற்ற இறக்கங்களோடு, பல்வேறு சித்தாந்த செயல்முறை மாறுபாடுகளோடு இன்றைக்கு 2017களில் மாவோயிஸ்டாக இந்திய அரசிற்கு இந்தியாவின் மையப் பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கிறது.

நகர்ப்புறங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் விவசாயமும், நீர்நிலைகளும் அழிக்கப்பட்டு மக்கள் குடிக்கவும் நீரின்றி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை தமிழக நகர்ப்புற மக்களும் அறிவார்கள்.

இது போன்ற நிலைதான் இதைவிடப் பன்மடங்காக சதீஸ்கர் மாவட்டத்தின் தண்டாகரன்யா, பஸ்தர் காடுகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கே அவர்களோடு மாவோயிஸ்ட்கள் நிற்கிறார்கள். அம்மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். பாரம்பரியமாகவே வில் அம்பு ஈட்டிகளுடன் தங்கள் எதிரிகளுக்கு எதிராக போராடும் போர்குணமிக்க அம்மக்களுக்கு நவீன ஆயுதங்களை ஏந்தவும், எதிரிகளுக்கு எதிராக நவீன வீயூகங்கள் வகுக்கவும் மாவோயிஸ்ட்கள் கற்றுத் தருகிறார்கள். அதன் உட்பகுதிகளில் அவர்கள் இந்திய அரசோ, இராணுவமோ, அதிகாரப்படைகளோ நுழையவும் முடியாத தனி நாட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அங்கே அப்பழங்குடிகளின் மொழியாகிய கோண்டி மொழியில் பாடத்திட்ட்ங்களை உருவாக்கி அவர்கள் கற்பித்து வருகிறார்கள். அந்நிய மூலதனத்தின் துனையின்றி அம்மக்களின் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு சுயமான உற்பத்தி பொருளாதார முறைகளை நவீனபானியில் உருவாக்கி வருகிறார்கள்.

அவர்களது நோக்கங்கள், லட்சியங்கள் எது குறித்தும் தெரியாது. அவர்கள் இந்த நுாற்றாண்டில் உலகம் முழுவதும் எதிர்ப்பியக்கங்கள் ஒழித்தழிக்கப்பட்டும், சமரசங்களுக்கு உள்ளாகியும் வரும் சூழலில் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது பெரும் கேள்விக்குறி. அவர்களது இராணுவவாத செயல்பாடுகளும், பின்தங்கிய மக்களைச் சார்ந்து செயல்படும் முறைகளும் எத்தனை வீதம் சரி என்று தெரியாது. வளர்ந்த இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், அறிவுஜீவிகளும் வளர்ந்துள்ள நிலையில் அவர்கள் மத்தியில் எல்லாம் வேலை செய்யவே முடியாத நிலையில் இருக்கும் அவர்களுடைய செயல்பாடுகள் சரியா என்கிற கேள்விகள் உள்ளன

1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள்.

“உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.

மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.

இந்தியாவில் பிரிட்டிஷ் தனது‍ அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள இரண்டு‍ ஆயுதங்களைப் பயன்படுத்தியது‍. ஒன்று‍ மக்களின் வேற்றுமையை கூர் சீவி மக்களை ஒருவருக்கொருவரை அவர்களுக்குள்ளேயே மோதவிடுவது, மற்றொன்று‍ சுதேசி மன்னர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு‍ கப்பம் செலுத்தும் விசுவாசமானவர்களாக மாற்றுவது.

இந்தியா விடுதலை அடையும் போது‍ மன்னராட்சி நடைபெற்று‍ வந்த சுதேசி சமஸ்தானங்கள் தொடர்பாக பிரிட்டிஷார் ஒரு‍ திட்டத்தை அறிவித்தது‍. இத்திட்டத்தின்படி‍ சுதேசி சமஸ்தானங்கள், இந்தியாவோடு‍ இணைவதா? பாகிஸ்தானோடு‍ இணைவதா? அல்லது‍ தனியாக இயங்குவதா என்று‍ முடிவு செய்யும் உரிமை மன்னர்களுக்கே வழங்கப்பட்டதாகும். பிரிட்டிஷ் அரசு‍ இந்தியாவிற்கு‍ சுதந்திரம் வழங்க ஒப்புக் கொண்ட நேரத்திலும் கூட, நாட்டை பிரிவினை செய்ததோடு, சுதேச சமஸ்தானங்களையும் தனியே பிரித்து‍ வைக்கச் சதி செய்தது.

அப்படி‍ மன்னராட்சி நடைபெற்று‍ இந்தியாவோடு‍ இணைய மறுத்தது‍ ஐதராபத் நிஜாம். 1947 ஆம் ஆண்டு‍ அக்டோபர் மாதம் இந்தியாவோடு‍ இணைய மறுத்து‍ ஏற்கனவே இருந்த மன்னராட்சி நிலை அப்படியே தொடரும் என்ற ஒப்பந்தத்தை ஐதராபாத் நிஜாம் இந்திய அரசோடு‍ செய்து‍ கொண்டார்.. சுயேட்சையாகவே ஆசாத்ஐதராபாத் ஆக செயல்படுவது‍ என்று‍ நிஜாம் முடிவு செய்தார். தொடர்ந்து, ஐதராபாத் மாநிலத்தை இந்தியாவோடு‍ இணைக்க வேண்டுமென்று‍கோரி ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபை, காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து‍ ஒரு‍ போராட்டத்தை துவ

ஐதராபத்தை இந்தியாவில் இணைப்பது, மன்னனுக்கெதிராக மக்களை அணி திரட்டுவது, ஆயுதமமேற்திப் போராடுவது‍ எனும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரசுக்கும் சில விசயங்களில் ஒருமித்த கருத்து‍ இருந்தது. நிஜாமை எதிர்ப்பது‍ ஐதாராபத்தை இந்தியாவோடு‍ இணைப்பது‍ போன்றவை. ஆனால் முக்கியமான விசயங்களில் காங்கிரஸ் வேறுபட்டது. அது‍ நிலப்பிரபுக்ளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஆதரிக்க மறுத்ததாகும். நில உச்சவரம்பு விசயத்தில் காங்கிரசார் 500 ஏக்கர் ஒருவர் வைத்திருக்கலாம் என்றனர். ஆனால், 10 ஏக்கர் மட்டும் போதும் என்பது‍ கம்யூனிஸ்டுகளின் வாதம்.

ஆனால், மக்களின் மனோபாவம் வேறாக இருந்தது. நிஜாமை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே விரும்பினர். நிஜாமிற்கு‍ எதிராக இயக்கம் மேலும் வலுவடைந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள், அறிவு ஜீவிகள், வளர்ந்து‍வரும் முதலாளிகள் என அனைவரும் நிஜாமுக்கு‍ எதிராக கிளம்பினர்.

நிலப்பிரபுத்துவத்துக்கு‍ எதிராக நிஜாமின் ஆட்சிக்கெதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னிலும் அதிக வீரியத்தோடு‍ ஒருமுகப்படுத்தின. தெலுங்கானா பகுதி முழுவதும் போராட்டம் வெடித்தது. நிஜாம் ஆண்ட பிரபுத்துவ ஐதராபத் சமஸ்தானத்தில் இந்தப் போராட்டம் விவசாயிகளின், மக்கள் எழுச்சியாக மாறியது.

10 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கிராம ஸ்கு‍வாடுகள், சகலவிதமான பயிற்சிகளும் பெற்ற நிரந்தரமான ஒரு‍ கொரில்லா படையும் அமைக்கப்பட்டது. எண்ணற்ற மோதல்களால் இக்காலத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதைவிட பல மடங்கு‍ எண்ணிக்கையில் நிஜாமின் ராணுவத்தினர், போலீசார், நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் விவசாயிகள் வசமானது. நில விநியோகம், கல்வி, சுகாதாரம் மற்றும் இதர கிராம சேவைகள் அனைத்தும் கம்யூனைச் சேர்ந்த மக்கள் குழுக்களாலேயே நிர்வகிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து‍ ஐதராபாத் பிரிவதையும் விவசாயிகள் இயக்கம் ஆந்திராவில் முழுமையாகப் பரவுவதையும் தடுக்கிற நோக்கோடு‍ இந்திய அரசு‍ராணுவததை 1948 இல் நிஜாமுக்கு‍ எச்சரிக்கை விடுக்கிறது.

1948 செப்டம்பர் 13 இல் இந்திய ராணுவம் ஐதராபாத்தை கைப்பற்றியது. இந்திய ராணுவத்தின் வருகையால் உற்சாகம் அடைந்த மக்கள், நிஜாமின் கூலிப்படைகளையும் நிலப்பிரபுக்களின் வீடுகளையும் இடித்து‍த் தரைமட்டமாக்கினர். வெறியாட்டம் நடத்திய நிலப்பிரபுக்களையும் தண்டனையளித்துக் கொன்றனர். இந்திய ராணுவம் நுழைந்த 5 ஆவது‍ நாளில் நிஜாம் சரணடைந்தார்.

1948-1951

நிஜாம் மன்னனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தை நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக அழித்து ஒழித்தது இந்திய அரசு. இதனால் ஆயுதப் போராட்டம் நீடிக்க வேண்டியதாயிற்று.

நிலப்பிரபுக்கள் அனவைரும் அரசதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர். இந்திய இராணுவம் மக்கள் படையின் மீது‍ தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. மன்னராட்சிக் எதிரான போராட்டத்தை விட சொந்த தேசத்தின் இராணுவமே மக்களுக்கு‍ எதிராக செயல்பட ஆரம்பித்தது. பின் அரசு‍ பேச்சுவார்த்தைக்கு‍ அழைத்தது. அரசு‍ நிலங்களை மக்களுக்கு‍ பிரித்துக் கொடுக்க ஒப்புதல் தெரிவித்தது, மற்றும் போராட்டங்களில் கலந்து‍ கொண்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதியில் தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் 1951 அக்டோபர் 21 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்போராட்டம் நான்கு‍ வகையில் பார்க்கப்படுகிறது..

 1. பகிரங்கவிரோதிகளால்: இப்போராட்டம் கம்யூனிச வன்முறை, கொள்ளை, அராஜகம் என்று‍ குறை கூறுகிறது‍.
 2. வலது‍கம்யூனிஸ்டுகள் (இன்றைய சிபிஐ): இந்தப் போராட்டத்தை குறிப்பாக 1949-1951 காலத்திய கொரில்லா போராட்டத்தை குறுங்குழுவாதம். வறட்டுச் சூத்திரவாதம், தனிநபர் பயங்கரவாதம் என்றது‍.
 3. நக்சலைட்(நக்சல்பாரிமாவோயிஸ்டுகள்): தெலுங்கானா போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை துரோகம் என்கின்றனர். இன்று‍ம் ஆந்திர மாநிலத்தில் கரீம் நகரில் நக்சல்/மாவோயிஸ்டுகள் இருப்பது‍ குறிப்பிடத்தக்கது‍.
 4. இடது‍கம்யூனிஸ்டு‍ (இன்றைய சிபிஐ(எம்)): இப்போராட்டத்தை ஆதரித்தவர்களில் பெருவாரியானவர்கள் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவின் போது‍ இந்திய கம்யூனிஸ்டு‍ கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்து‍ செயல்பட்டனர்.

இந்தப் போரட்டத்தின் பெருமைக்குரிய சாதனைகள்

 • போராட்டம் 16,000 சதுரமைல் (கிமீ) சுமார் 30 லட்சம்மக்களைஉள்ளடக்கி, மூன்று‍மாவட்டங்களில் 3000 கிராமங்களில்கிராமஇராஜ்ஜியம்அமைப்பதில்வெற்றிபெற்றது.
 • மக்கள்குழுக்களில்வழிகாட்டலின் அடிப்படையில் 10 லட்சம் ஏக்கர் நிலம்விவசாயிகளிடம் மறுவிநியோகம் செய்யப்பட்டது (இந்தியாவில் மேற்கு‍ வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மட்டும் தான் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது‍).
 • கட்டாயஉழைப்புமுறைஒழிந்தது, விவசாயத்தொழிலாளர்களின்கூலிஉயர்ந்தது.
 • முதன்முறையாகஇலட்சக்கணக்கானவிவசாயிகள்தினமும்இரு‍முறைசாப்பிடமுடிந்தது.
 • நிலவுடமைப்புரட்சி (Agrarian Revolution) முன்னுக்கு‍வந்தது.
 • காங்கிரஸ்வேண்டாவெறுப்பாகநிலச்சீர்திருத்தசட்டத்தைஅமல்படுத்தநிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தசமயத்தில்தான்நிலஉச்சவரம்புச்சட்டமு‍ம்இயற்றப்பட்டது.
 • 1956 இல்இந்தியாவில்மொழிவழிமாநிலங்கள்உருவாவதற்கு‍வழிகோலியது.
 • இந்தியவரைபடத்தைமொழிவழியில்அதாவது‍தேசநலனுக்குகந்தவழியில்ஜனநாயகவழியில்திருத்திவரைவதற்கு‍ஈடிணையற்றபங்கைச்செலுத்தியது..
 • 1952 பொதுத்தேர்தலில்கம்யூனிஸ்டு‍கட்சிதனிப்பெரும்எதிர்க்கட்சியாகமலரவழிகோலியது..
 • இறுதியாகதெலுங்கானாபோராட்டம்இந்தியகம்யூனிசஇயக்கத்தின்மக்கள்ஜனநாயகபுரட்சியின்நடைமுறைஉத்திமற்றும்தந்திரம்குறித்தஅடிப்படையானதத்துவ-சிந்தாந்தப்பிரச்சனைகளைமுன்னிறுத்திவிஞ்ஞானரீதியில்எதார்த்திற்கானநடைமுறைத்தீர்வுகளைகோரிநின்றது.

இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மற்றும் உழவர்கள் 4000 பேர் கொல்லப்பட்டனர். 10000 க்கும் மேற்பட்டவர்கள் 3-4 ஆண்டுகளில் சிறையிலடைக்கப்பட்டனர்.

நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.

ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.

அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.

1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.

1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.

1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.

பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.

நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.

24 Aug 1948, Calcutta, India — Calcutta police use tear gas bombs during an attempt to set fire to a Hindu temple in the riots. — Image by © Hulton-Deutsch Collection/CORBIS

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.

க்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

துவக்கப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்குள்ளேயே  நக்சலைட் இயக்கம் பிளவுண்டது.  நக்ஸலைட்டுகள் எண்ணற்ற  சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தனர். பிளவும் அதில் மீண்டும் பிளவு ஏற்படுவதுமானது கிட்டத்தட்ட  முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்தது.  இத்தகைய நிலையில்  ஆந்திரப் பிரதேசத்தில்  கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையில் மக்கள் யுத்த குழு (Peoples War Group)  துவங்கப்பட்டது.  நக்சலைட் தலைவர் சாரு மஜூம்தாரின் பாதையே எங்கள் பாதை என முழங்கினர்.  சாரு மஜூம்தாருக்கு எதிரான குழுவின் தலைவர்களான கனைய் சட்டர்ஜி, அமுல்யா சென், சந்திரசேகர் தாஸ் ஆகியோர் தலைமையில்  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC)  என்ற அமைப்பை உருவாக்கினர்.  புதியதாக உருவான சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியானது சட்டர்ஜி, மஜூம்தார் ஆகிய  இருவரையும் மகத்தான தலைவர்கள் எனவும்  அவர்களையே  தாங்கள் மதிக்கும் தலைவர்களாகவும்  தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந் துள்ளது  தவிர்க்கவியலாத நிலை என்றாலும், இவர்களுடைய 1980 முதல் 2000 இறுதி வரையிலான  காலத்தில் இவர்களுக்குள் எவ்வாறு ஒருவர் மீது ஒருவர் தொடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனால் இரு பக்கங்களிலும் ஏற்பட்ட தேய்வையும்  ஆவணங்களிலிருந்து காண முடிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *