Palm Tree Politics – Danger of Extinction

*தமிழர்களின் புனித மரமாகக்* கருதப்படுவதும், தமிழத்தின் மாநில மரமுமாகிய *பனை* மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

*இம் மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம் மரத்தை பூலோகத்தின் கற்பகத் தரு என்கிறார்கள்.*

*ஒரு பனை அழிஞ்சா ஒரு தலைமுறையே அழியுறதுக்குச் சமம்.*

*பனை மரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. அதனால்தான் சோழர் காலத்தில் ஊரின் எல்லையில் பனையும், தென்னையும் வளர்ப்பதற்கான உரிமையை சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர்.*

*இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 50 சதவிகித மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.*

*பனை அதிகபட்சமாக 100 அடி உயரம் வரை வளரும். இது 120 ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.*

*1970ஆம் ஆண்டில் இருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அதே அளவு மரங்கள் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. *

*1985-86 ஆண்டுகளில் இந்திய அளவில் 6.94 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தமிழகத்தில் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தந்த சிறப்பு பனைத் தொழிலையே சாரும்.*

*மேலும் விபரங்களுக்கு இந்த காணொளியை பாருங்கள்!!!*

*இதை பகிர்ந்து தமிழின மாற்றத்தில் பங்குபெறுவோம்*

*ஒரு பனை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, ஒன்று புள்ளி ஐந்து கிலோ ஈர்க்கு, 16 நார் முடிச்சுகள், 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் கிடைப்பதாகவும், இதன்மூலம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை வருமானம் கிடைப்பதாகவும், கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழும கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி அந்நியச் செலாவணி கிடைப்பதாகவும் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.*

*தமிழகத்திலுள்ள 12,500 ஊராட்சிகளிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப 2,000 முதல் 5,000 வரை பனை விதைகளை வழங்கி, அவற்றை விதைத்து பாதுகாப்பாக வளர்ப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அத்துடன் பனை மரம் ஏறுவதற்கான இயந்திரங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.*

*கிராமங்களிலுள்ள குளங்களைச் சுற்றி பனை மரங்களை நட்டு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அது குளக்கரையைப் பலப்படுத்துவதற்காக நம் முன்னோர் கையாண்ட முறை. பனைமரத்தின் சல்லிவேர்கள் பரவலாக ஊடுருவிச் சென்று மண்ணை இறுகப் பற்றிக் கொள்வதால், மண் அரிப்பு ஏற்படுவதில்லை. இதனால், கரை பலப்படுகிறது. இப்படி கரைகளில் பனையை விதைக்கும்போது மரத்துக்கு மரம் 10 அடி இடைவெளி இருக்குமாறு விதைத்திருக்கிறார்கள். அதனால்தான் பனைக்குப் பத்தடி என்ற சொலவடை உருவாகியிருக்கிறது.*

“தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான், பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்னு’ பழமொழி உண்டு, பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால, அப்படிச் சொன்னாங்க. பனை மரம் மனிதர்களுக்கு மட்டும் பயன் தரக் கூடியதல்ல, எறும்பு, பூச்சிகள், வண்டுகள், ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வெüவால், அணில், கிளி, குருவி என அனைத்து உயிர்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது.

‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’

ஒரு சமூகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு, அந்தச் சமூகத்தின் வழிபாட்டு முறைகள், உணவுப் பழக்கங்கள், உடை, இலக்கியங்கள் எனப் பலவற்றை ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாம். அவற்றுள், அந்தச் சமூக மக்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்களைக் கொண்டு, அவற்றுக்கும் அந்தச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவை, பண்பாட்டை ஆராய்வதை ‘பொருள்சார் பண்பாடு’ என்கின்றனர்

பனை மூலமா 80 பொருட்களும், 800 விதமான பயன்களும் கிடைக்குதுங்க
இலங்கையில பனை மரத்துக்கு ராஜ மரியாதைதான். பனை மரத்தை வெட்டினா, ஜெயில்ல போட்டு அடைக்கிற சட்டம், 1993-ம் வருஷத்துல இருந்து அங்க நடைமுறையில இருக்கு.

நம்ம நாட்டுல சாதாரண மக்கள் தொடங்கி, நாட்டை ஆண்ட மன்னன் வரையிலும் பனை மரத்தோட இணைஞ்சுதான் வாழ்ந்திருக்காங்க. சேர மன்னருங்க, பனம் பூவைத்தான் மாலையா கட்டி சூடிக்குவாங்களாம். இன்னும் கூட கிராமத்துல இருக்கிற சிறு தெய்வங்களுக்கு காதோலை… பனை ஓலையில செய்து வைக்கிற பழக்கம் இருக்கு.

தமிழ்நாட்டுல பழமையான கோயில்கள்ல தல விருட்சம் இருக்கு. தல விருட்சமா சந்தனம், மருதுனு அரிய வகை மரங்கள் இருக்கும். ஏன்னா, கோயில்ங்கிறது காலம், காலமா பாதுக்காக்கப்படற இடம். அங்க அரிய பொருளை வெச்சுட்டா, அழிஞ்சி போகாம இருக்கும். அதனாலதான், கோயில்ல தல விருட்சத்தை வளர்க்க ஆரம்பிச்சாங்க. சில கோயில்கள்ல தல விருட்சமா

பதநீருக்கும் கள்ளுக்கும் இடையே முடிச்சுப்போட்டுப் பார்ப்பது தவறான பார்வை. பதநீர் என்பது ஆரோக்கிய பானம். பனை மரத்திலிருந்து பெறப்படும் இனிப்பான சாற்றை, இயல்பாகப் புளிக்கவிட்டால் அது கள். சுண்ணாம்பின் துணைகொண்டு அதைப் புளிக்கவிடாமல் செய்தால் அது பதநீர். ஆனால், பனையிலிருந்து பதநீரை எடுப்பதை யும் ‘கள் இறக்குவது’ என்றே குறிப்பிடு கின்றனர். முன்னர், பல ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்து வந்த இத்தொழில், 1983-ல் ‘டாஸ்மாக்’ தொடங்கப்பட்டபோது, தடை செய்யப்பட்டது.

கள்ளின் காரணமாகப் பனை இழிவானதாகப் பார்க்கப்பட்டது. இதற்கு சமணம், வைதீகம் உள்ளிட்ட மதங்களுக்குக் கணிச மான பங்குண்டு. பிற்காலத்தில் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனையை அரசே ஊக்குவித்ததால் கள்ளோடு சேர்த்துப் பதநீர் தொழிலும் பாதிப்புக்குள்ளானது.

ஓடியல்மாவு எனப்பெயரிட்டு அதை கஞ்சிகரைத்து சாப்பிடுகின்றனர்.

1985- 86ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் 6.94 லட்சம் பேருக்கும், மாநில அளவில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது. இதில் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் அடங்குவதாக வாரியக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

பனை மரம் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.

தாய்த் தமிழைப் போற்றிய மரம்!
தற்சார்பை உறுதிபடுத்தும் மரம்!
வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய மரம்!
பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாக்கும் மரம்!
மண் அரிப்பை தடுக்கக் கூடிய மரம்!
நீர்வளத்தை மேம்படுத்தக் கூடிய மரம்!
சிறுவர்களுக்கான பல்வேறு பொருட்களை வழங்கக் கூடிய மரம்!
சுவையான, ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் மரம்!
கால்நடைகளுக்கும் உணவை வழங்கும் மரம்!
இயற்கை உரமாக தனது பொருட்களை வழங்கும் மரம்!
சுய உதவிக்குழுக்களுக்கு உதவிடும் மரம்!
நெகிழிக்கு மாற்றாக பல பொருட்களை வழங்க வல்ல மரம்!
தமிழர்களின் வாழவியல் குறியீடாக விளங்கிய மரம்!
பல்வேறு மருத்துவ பயன்களை வழங்கும் மரம்!
தன்னுடைய அனைத்து பாகங்களில் இருந்தும் பயன்களை அள்ளித்தரும் மரம்!
இருக்கும் போதும் இறந்த பின்னரும் வாழ்வளிக்கும் மரம்!
வறட்சியைத் தாங்கி வளரும் மரம்!
பூலோகத்தின் கற்பகத்தரு என்றழைக்கப்படும் மரம்!
இதன் அருமை தெரியாத மனித இனத்தால் தற்போது அழிவுன் விளிம்பில் உள்ள மரம்!
ஆம், அதுவே நம் மாநில மரம் எனும் பனை மரம் !
50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..*

*வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:*
 *180 லிட்டர் பதநீர்*
 *25 கிலோ கருப்பட்டி*
 *20 கிலோ பனை நார்*
 *10 கிலோ விறகு*
 *6 பாய்*
 *2 கூடை*
 *குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820*

ஒரு மரத்தில் ஒரு வருடத்தில் 4 புது ஓலைகள் வரும். 4 காய்ந்த  ஓலைகள் கீழே விழும். ஒரு ஓலையின் மதிப்பு 20 ரூ.4 ஓலைக்கு 80 ரூபாய் வருமானம். சராசரியாக ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு பனை சீசனில் 150 லிட்டர் பதனீர் கிடைக்கும். ஒரு லிட்டர் 25 ருபாய் வீதம் 150 லிட்டருக்கு 3,750 ரூபாய் வருமானம் வரும். நுங்கு 8 குலைகள் கிடைக்கும். ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். ஒவ்வொரு பனங்காயிலும் 3 கண் நுங்கு இருக்கும். 3 நுங்கு 10 ரூபாய். 8 குலைகளில் 160 பனங்காய்கள். ஒரு காய் (3 கண் உடையது) 10 ரூபாய் வீதம் 160 காய்க்கு 1,600 ரூபாய் வருமானம். நுங்கு இறக்காமல் அப்படியே விட்டால் பனம்பழமாக பழுத்து கீழே விழும். ஒரு பழத்தில் 3 கொட்டைகள் 160 பழத்தில் 480 கொட்டைகள் வரும். மண்ணில் புதைத்து வைத்தால், 4 மாதத்தில் 480 கொட்டைகளில் சராசரியாக 450 உருப்படியான கிழங்குகள் கிடைக்கும். கிழங்கு ஒன்று 3 ரூபாய் வீதம் விற்றால், கிழங்கு மூலம் 1,350 ரூபாய் வருமானம் வரும். மொத்தத்தில் ஒரு வருடத்தில் பனை மூலம் வருமானம் 5,430 ரூபாய் ( இதில் கிழங்கு வருமானம் ரூ.1,350 சேர்த்தால் 6,750 ரூபாய்) சராசரியாக ஒரு பனையின் ஒரு வருட மதிப்பு 5,000 முதல் 6,000 வரை கிடைக்கும்’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *