Valari Known as Boomerang – A Lost Weapon of Thamizhargal

Valari Known as Boomerang - A Lost Weapon of Thamizhargal

By

admin

October 14, 2018

Share on Facebook

Tweet on Twitter

 

NOTE: Don't view this article with a caste in your mind, but view this article as a Tamilian. This article is based on some castes, but if you look over you will come to know many facts.

Valari is a weapon that is used as an ancient method to capture runners. These weapons were also called as Valaithadi, Paravalai , Suzhalpadai, Padaivattam.

Valai Eri’s short form is called as Valari. This weapon was used during the Sangam period.

Krishna used Sudarsana Chakram in Mahabharata war, but it was called as Valari by the Tamil People. (மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, 2016, .31).

When Valari is thrown the force should not be reduced. If the weight of the weapon is too high, you can not throw it long distance. If reduced, the effectiveness of the attack will decrease. More importantly, an iron rod must have a basic weight control to drive towards the target. The weight of the weapon in the centre of the arsenal helps to accumulate its balance and travel accurately in the path of the key. The technology behind Valari is one of the unique achievements of the Tamil people.

In the 17th and 18th centuries, numerous facts were written in British documents. These facts denote that this weapon was not seen elsewhere. The stealthy and surprising attacks using these weapons are a real shock to the british.

This weapon is similar to those used by the Australian people. The Europeans, who first thought that these two people are only the ones who are using this weapon in the whole world later changed this Conclusion. In the 18th Century, Savaillt Kent a Researcher in Australian history mentioned in his documentary, "This tool was first introduced to the Australians by the people who migrated from ASIA”.

Colonel James Wells, who had a number of important responsibilities in the East India Company, writes about Valari in his military history. When East India Company had good relations with the Sivagangai Seemai, he learned a great deal from Periya Maruthu on how to use this weapon. He also learned that it was not used anywhere else in the world that he was able to throw this weapon in a hundred gauge to attack the target precisely.

For East India Company’s generals, Valari became the most fearful weapon. In the war with the Pallaiya kalargal, the guerrilla warfare was conducted using this deadly weapon against the British.

Once the war ended, the East India Company administration brought the Arms Act of 1801. Accordingly, it was announced that if people were found to have Weapons of War they would be hanged in public. All kinds of weapons were captured. Pallaiya kalargal, War heroes and civilians were all ordered to give their weapons away. The East India Company Apprehended 20,000 Valari’s.

In South India, all the weapons were found and destroyed. The East India Company were hell bent to destroy these weapons and the history behind these amazing weapons. So they destroyed all the weapons and they didn’t even want to leave a trace back to the weapons. Slowly the weapon was lost to time with the British destroying its Identity.

100 years passed., the human species now searched and explored the origins of this amazing and deadly weapon. In 1883, the Englishman, R.Proposbat, recorded that he had seen the use of the weapon only in Madurai district. This is the last account of the Englishman's recordings.

Valari was used in war, fights, and hunts. It was the favourite weapon of choice in a deer hunt. Valari was a famous weapon in the KaLLar naadu and Sivaganggai Siimai – the present PudukkOttai, Sivaganggai, and parts of Madurai and Ramanathapuram districts.

There were competitions in Valari throwing. It was the favourite weapon of great heroes of these territories. Among the most notable vaLari exponents are Periya Marudhu, Chinna Marudhu, the rulers of Sivaganggai and one of their generals, Vaithilingga ThoNdaimaan of Pattamanggalam.

 

 

1)The forest area is Mullai, Ruler of Mullai was  Mall, as known as Mayon 's Kalvan. His Weapon was Valari.( கலித்தொகை)

2) A Cholan called Mall who had the Valari Army. (சிலப்பதிகாரம்)

3) The name of the Kal lars was given to the weapon as "kallar Thadi". (Tamil dictionary)

4) Valaithadi - the main feature of the Kal lar’s marriage (British archaeologist Robert Bruce)

5) The British called "COLLERY" which derived from the Kal lar use of the weapon. (Mr.Welsh)

  1. Kings of Puthukottai had a Valari Army.(Puthukottai History).
  2. The Brave kal largal used this weapon to attack the British with deadly precision. So the British banned the use of the weapon in the country. (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

வளரியை உருவாக்கியவனும், வீசியவனும், அதை இந்த மண்ணை விட்டு மறைய செய்தவனும் கள்ளனே”.

Thikiri, Kallar thadi, Valari, Valai Thadi, Paravalai, Eri valai all these names originated from the Tamil History which was later changed to Boomerang for the world’s view. Boomerang is a cordon shaped, almost curved shape with a hand-stained weapon. One node is very heavy and the other one is sharp. These Unique weapons were made of Wood, Iron and Ivory they mostly used it for hunting and as a weapon when in wars.

Holding the Heavy tip of the weapon and rolling it over the shoulder and quickly throwing it toward the target, it will hit the target and return to the thrower. A wonderful weapon that can attack the enemy and reach the thrower. The skilled thrower must be very careful when the Weapon returns to him. Otherwise, there is a possibility of attacking the thrower. (Tamil Articles (Volume I) p. 31).

Warriors will keep the weapon in their comb. When the war happens, they will fight against the enemy by throwing them out of their comb. These Unique tactics are still present in older families of some Kallar and Maravar. They still use it in their lives.

 

1) # திருமால்கள்வன்ஆயுதமாகக் கலித்தொகை சுட்டுகிறது.

மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (134:1-4)

பொருள்: யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும்.

2) # சோழ மன்னன்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்

பொருள்: சோழ மன்னன் பொன்னால் செய்த அழகிய வளரி என்னும் போர்ப்படையை உடையவன்

இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

3) # நடுகல் கல்வெட்டில்

கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனிரையைக் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்ளர் குலத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். புறநானூறு பாடலில்மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்என்று உள்ளது. கூடல் நகர் ஆட்சி செய்த அகுதை என்ற குறுநிலத் தலைவன்பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது.

4) # கலிங்கத்துப்பரணி.

களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே” (கலிங்கத்துப்பரணி:418)

5) # புறநானூற்றில்

எரிகோல் அஞ்சா அரவின் அன்ன “(புறம்.89-5) எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது.

வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக்குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது.

6) # ஐங்குறுநூற்று

மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)

வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில்காவலர்எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.

7) பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்கள் கள்ளரின் மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்களுக்கு இடையில் வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார்.

8) புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது.

9) சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது வைத்தியலிங்க தொண்டைமான் அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

10) தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு வளரி போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது.

11) “விஜய சேதுபதி (கி.பி.1710-1725) மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, .43).

12) கள்ளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), .40).

13) ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வளரியை பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் சண்டையிட்டார்கள்.

14) கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதம் வளரியாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, .41).

15) வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் நாட்டில் பயன்படுத்த பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி
சே. முனியசாமிமுனைவர்பட்ட ஆய்வாளர்
நன்றி:- கள்ளர் வரலாறு kallar history

Reference

http://thevar-mukkulator.blogspot.com/2013/04/blog-post_7058.html

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rare-insights-into-lives-of-marudhu-brothers/article4042387.ece

https://en.wikipedia.org/wiki/James_Welsh_(East_India_Company_officer)

https://groups.google.com/forum/#!topic/thamizayam/-GC1GfIWupU

https://experimental-prehistory.blogspot.com/2015/01/traditional-boomerangs-in-india.html

https://www.ancient-origins.net/ancient-places-australia-oceania/tamils-and-sumerians-among-first-reach-australia-and-antarctica-021743

http://martial-arts-of-tamil-nadu.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *